தனியார் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமரால் இந்தியா, அடுத்த பத்தாண்டுகளில் உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார சக்தியாக வளரப் போகிறது என்று முகேஷ்அம்பானி மயிர்க் கூச்செறிந்துள்ளார்.

2020-ம் ஆண்டுக்கான தொழில் முனைவோர் விருது வழங்கும் (Entrepreneur of the Year – India(EOY) விழா காணொளி முறையில்நடைபெற்றது. இதில், ‘ரிலையன்ஸ்இண்டஸ்ட்ரீஸ்’ (Reliance Industries) தலைவரும், இந்தியாவின் ‘நம்பர்ஒன்’ பணக்காரருமான முகேஷ் அம்பானி கலந்துகொண்டு பேசியிருப்பதாவது:

‘இந்திய எழுச்சிக்கான உந்து சக்தியாக நம்முடைய தொழில்முனைவோர்கள் (முதலாளிகள்) இருப்பார்கள். யாரெல்லாம் ஒவ்வொரு நாளும்புதியவற்றைக் கண்டுபிடிக்கிறார் களோ அவர்கள் இந்தியாவையும், உலகையும் மாற்றியமைக்க முடியும். பொருளாதாரம், ஜனநாயகம், கலாச்சாரம், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட பச் சக்தி ஆகியவற்றில் உலக அளவில் இந்தியா வளர்ந்து வருகிறது. வரும் பத்தாண்டுகளில் உலக அளவில் முதல் மூன்று பொருளாதார சக்தியாக வருவதற்கான பலம் இந்தியாவுக்கு உள்ளது.நான் இன்றைய இந்தியாவையும்,நாளைய இந்தியாவையும் பார்க்கும்த போது தொழில்முனைவோர்களுக்கு சுனாமி போல ஏராளமான வாய்ப்புகள்உள்ளன. என்னுடைய நம்பிக்கைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது நம்முடைய பிரதமர்நரேந்திர மோடி. அவர், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்காக தனியார் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். இரண்டாவதாக, நம்முடைய பொருளாதாரத்தை மாற்றியமைக்க நம்மிடம் புதிய வகை புரட்சிகரமான தொழில்நுட்பங்கள் உள்ளன. 130 கோடி மக்களுக்கான நல்ல வாழ்க்கைக்கான தேவை மற்றும் கனவுகளை சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்பு நம் வாழ்க்கையில் ஒருமுறை நம்முடைய தொழிலுக்கு கிடைக்கும்.

புதிய துறைகளான தூய எரிசக்தி, கல்வி, சுகாதாரம், வாழ்கை அறிவியல், உயிரிதொழில் நுட்பம், விவசாயத்துறையில் ஏற்படும் மாற்றம்,தொழிற்சாலைகள், சேவைத்துறையில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான வாய்ப்புகள் உள்ளன.உலகத் தரத்துடன் போட்டிப்போடும் அளவுக்கு தரமான பொருட்களைஉரிய விலையில் வழங்குவதற்கானதிறமை இந்திய தொழில்முனைவோர் களிடம் உள்ளது.எனவே, நமது புதிய தொழில்முனைவோர்கள் அளவற்ற கனவுகளுடன் அளவான வாய்ப்புகளுடன் பணியாற்றுவதற்கு தயாராக இருக்கவேண்டும்.’ இவ்வாறு முகேஷ் அம்பானி பேசியுள்ளார்