இந்தியப் பொருளாதாரமானது, 2019-ஆம் ஆண்டு பெற்றிருந்த வளர்ச்சியைக் கூட 2021-இல் பெறாது என்று ஆசிய – பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா.வின் பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையமான ‘யுனெஸ்கேப்’ (The United Nations Economic and Social Commission for Asiaand the Pacific – ESCAP) கூறியுள்ளது.

2020-21-இல் இந்தியப் பொருளாதாரம் 7.7 சதவிகிதம் சரிவடையும் என்று அது கணித்துள்ளது.இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்காக, வட்டி குறைப்பு, உற்பத்தி நிறுவனங் களுக்குச் சலுகை உள்ளிட்டவற்றை மத் திய அரசு அறிவித்தது. கொரோனா-வைகட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும்மக்களுக்குத் தடுப்பூசியும் வழங்கி வருகிறது. எனினும்கூட 2021-இல் நாட்டின் பொருளாதாரம்  2019-ஆம் ஆண்டு அளவீட்டை விடவும் குறைவாகவே இருக்கும்; 2020-21-இல் இந்தியப் பொருளாதாரம் 7.7 சதவிகிதம் சரிவடையும் என ‘யுனெஸ்கேப்’ தெரிவிக்கிறது.இந்தியா, வங்கதேசம், பூடான், ஈரான்,ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற 50-க்கும்மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கி நடத்தப் பட்ட இந்த ஆய்வில் சீனப் பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சி நிலைகளை தாண்டிவிட்டதையும் ‘யுனெஸ்கேப்’ சுட்டிக் காட்டியுள்ளது. 2020-ஆம் ஆண்டின்நான்காம் காலாண்டில் அதன் பொருளாதாரவளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருப்பதாகவும் ‘யுனெஸ்கேப்’ கூறியுள்ளது.

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் படிப்படியாகக் குறைந்து வர்த்தகச் சந்தை மீண்டுவந்த காரணத்தால் 2020-2021ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் இந்திய நாட்டின் பொருளாதாரம் மைனஸ் நிலையிலிருந்து தற்போதுதான் ‘0’ நிலையைஅடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள கணிப்புகளிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2020-21ஆம்நிதியாண்டில் 8 சதவிகிதமாக சரிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கைகள் மூலம், நாட்டின் முதலீட்டுச் சந்தை பெரிய அளவிலான பாதிப்பைச் சந்திக்கும். இந்திய முதலீட்டுச் சந்தைக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகள்கணிசமாக குறையும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.