BSNLன் டவர்கள் மற்றும் ஆப்டிக் ஃபைபர் கேபிள்களை விற்பனை செய்வதன் மூலம், 40,000 கோடி ரூபாய்களை திரட்ட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மீடியாக்களில் வந்த செய்தியினை, 30.03.2021 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு, CMD BSNLஐ சந்தித்த போது குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக எந்த தகவலும் நிர்வாகத்திற்கு வரவில்லை என CMD BSNL பதிலளித்தார்.

நிதி திரட்டுவது என்ற பெயரில், மத்திய அரசாங்கம், BSNLன் டவர்களையும், ஆப்டிக் ஃபைபர்களையும் விற்பனை செய்ய முயற்சி செய்தது என்றால், அதற்கெதிராக ஊழியர்கள் உறுதியாக போராடுவார்கள் என பொதுச்செயலர், CMD BSNLஇடம் தெரிவித்தார்.

BSNLன் டவர்கள் மூலம் நிதி திரட்டுவது என்றால், அது டவர்களை தனியார் மயப்படுத்துவது தானே தவிர வேறு எதுவுமில்லை என தெளிவு படுத்திய BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு, இதனை ஊழியர்கள் என்றும் அனுமதிக்க மாட்டார்கள் என உறுதி பட தெரிவித்துள்ளார்.