துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து, BSNLல் உள்ள அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் பலமுறை, சஞ்சார் பவன் நோக்கிய பேரணி, ராஜ் பவன்களை நோக்கிய பேரணிகள், பல பிரச்சார இயக்கங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதன் காரணமாக, BSNL நிர்வாகமும், அரசாங்கமும், டவர் நிறுவனத்தின் (BSNL TOWER COMPANY LIMITED) செயல்பாட்டை தாழ்ந்த நிலையில் வைத்திருந்தன.

ஆனால் தற்போது, BSNL நிர்வாகம் அதன் செயல்பாட்டை அதிகரித்துள்ளது. அதே சமயம், BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் டவர் மற்றும் ஆப்டிக்ஃபைபர்கள் மூலம் 40,000 கோடி ரூபாய்களை திரட்ட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, அரசாங்கம், BTCL நிறுவனத்தில் ஒரு கேந்திர பங்குதாரரை புகுத்த முயற்சி செய்கிறது என்பது தெளிவாகிறது.

இந்த சூழ்நிலையில், BTCLன் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.