BSNL, 4G சேவையை துவக்குவதில் ஏற்பட்டுவரும் கடுமையான காலதமதம் தொடர்பாக, பாரத பிரதமருக்கு, AUAB ஒரு கடிதம் எழுதியிருந்தது. BSNLன் 4G சேவைகளை துவங்குவதற்கு எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பாக AUAB அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. அந்த கடிதத்தை, பிரதம மந்திரி அலுவலகம், DoT மூலமாக BSNLக்கு அனுப்பியுள்ளது. அந்த அலுவலகங்களின் கடிதங்கள் காரணமாக, கார்ப்பரேட அலுவலகம், AUAB அமைப்பாளர் தோழர் P.அபிமன்யு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் எதிர் வரும் 4G டெண்டரில் கலந்துக் கொள்வதற்கும், அட்டவணைப்படுத்திக் கொள்ளவும் விருப்பம் கோரும் மனுக்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.